Monday, 20 February 2012

நிலவே வா !!

நிலவே

ஏ நிலவே ……நான் உன்னை காதலிக்கிறேன் !!


எட்டாத தொலைவில் நீ இருந்தாலும் நான் உன்னை காதலிப்பேன் !!


கேட்காத தூரத்தில் நீ இருந்தாலும்

நான் உன்னை காதலிப்பேன் !!


எனக்காக ஒரு போதும் நீ காத்திருப்பதில்லை 

என்பதை தவிர வேறொன்றும் வருத்தமில்லை உன் மீதெனக்கு !!


ஏ நிலவே நீ ஒருநாள் வரவில்லை என்றாலும் …

என் வாழ்க்கை இருன்டு போய் விடுகிறது …இனியொருமுறை அப்படிச் செய்யாதே !!


விடிவதற்குள் ஓடிஒளிந்துகொள்கிறாய்   …நான் பகல்முழுவதம் தேடித் திரிகிறேன் உன்னை !


மாதம் ஒருமுறை மட்டுமே முழுமுகம் காட்டுகிறாய் …சில நாள் தலை மட்டும் ,சிலநாள் கால் மட்டும் ,ஒரு நாள் அதுவுமில்லை !


எது எப்படியோ இன்றாவது என் காதலைச் சொல்லிவிட வேண்டும் என்று காத்திருக்கிறேன் என்வீட்டு மொட்டைமாடியில் உன் வருகைக்காக  !


Published with Blogger-droid v2.0.4

4 comments:

  1. நிலா என்றாலே பிரச்சனை தான். அம்புட்டுதான் என்னால சொல்ல முடியும்.........

    ReplyDelete
    Replies
    1. யோவ் நீ எந்த நிலாவ சொல்ற ?? இந்த குளிக்கிறதுக்கு மினரல் வாட்டர் கேட்டுச்சே அந்த நடிகையா ?? நான் வானத்தல வட்டமா தோசை மாதிரி இருக்குமே அதை சொன்னேன்யா !

      Delete
  2. >>ஏ நிலவே நீ ஒருநாள் வரவில்லை என்றாலும் …

    என் வாழ்க்கை இருன்டு போய் விடுகிறது

    எஸ் ஜே சூர்யா செம காண்ட்ல இருக்காராம்.. ஹி ஹி

    நிலா வந்தாலும் வர்லைன்னாலும் இப்பொ இருட்டுதான் கரண்ட் இல்லையே?

    ReplyDelete
  3. ஹி ஹி அவருக்கென்ன சார் நான் நிலா நினைச்சா ??? கரன்ட் இல்லாததால் தான் இப்படியெல்லாம் யேசியக்க வேண்டியிருக்கு தல :(

    ReplyDelete