Thursday, 11 October 2018

Ee.ma.yau ஒரு பார்வை ....

மளையாலப் திரைப்படங்களை நாம் விரும்ப மிக முக்கிய காரணம் பெரும்பாலும் வில்லன் என்று  யாரும் இருக்க மாட்டார்கள்.எதார்த்தம் என்னவோ அதை திரையில் காட்ட முயற்சி பண்ணுவாங்க .

நாம் தினந்தோறும் சந்திக்கும் மனிதர்கள், நாம் கவனிக்க தவறியவர்கள்னு எதார்த்தத்தைக் காட்டுவதால் தான் நாம் திரையில் காணும் கதாபாத்திரங்களோடு நம்மை இணைத்துப்பார்க்கிறோம். சூழ்நிலைகள் தான் வில்லனாக அமையும் அந்த வகையில் இந்தப்படத்திலும் வில்லன்னு யாருமில்லை.

நீங்க கிராமத்தில் கொஞ்ச நாளாவது வாழ்ந்து இருந்திங்கன்னா வாவச்சன் மாதிரி ஆட்களைச் சந்தித்திருக்கலாம்.திடீர்னு காணாம போயிருவாங்க திடீர்னு திரும்பி வருவாங்க ஆனா அவங்க குடும்பத்தில் இருப்பவர்களோ கிராமத்தை சேர்ந்தவர்களோ அவங்களைத் தேட மாட்டாங்க.அந்த மாதிரி ஒரு ஆள் தான் வாவச்சன்

அப்படிதான் அன்றும் தன்னுடைய பயணத்தை முடித்துக்கொண்டு  வீடு திரும்புகிறார் வாவச்சன்.அவருக்கு தெரியும் இது தான் தன்னுடைய கடைசிப் பயணம் என்று.

பயணங்களையே வாழ்க்கையாய் கொண்டிருந்த ஒரு  மனிதன் தன் இறுதிப்யணத்தின் கனவுகளோடு தன் மகனிடம் சில விசயங்களை பகிர்ந்துகொள்கிறார்.

தன் தந்தையின் இறுதி ஊர்வலத்தின் பெருமைகளைச் சொல்லி தனக்கும் அது போன்றதொரு சிறப்பான பயணத்தை ஏற்பாடு பண்ணவேண்டும் என கேட்டுக்கொள்கிறார்.அவர் எதிர்பார்த்தது போலவே அன்று இரவே அவர் இறந்தும் விடுகிறார்.

வாவச்சனின் ஆசைப்படி அவரது இறுதி ஊர்வலம் சிறப்பாக நடந்ததா ?என்னென்ன இடையூறுகளை அவரது மகன் சந்தித்தார் என்பதை மீதிப்படம் சொல்லும்.

Monday, 2 December 2013

வாரம் ஒரு ஈரானியத் திரைப்படம்

தமிழ் படங்களையே பார்த்து பார்த்து அலுத்தவிட்டதாலும்  அவர்களும் வேறு கதை கிடைக்காமல் அவதிப்படுவதாலும் ,
அவர்களுக்கு தொந்தரவு தரக்கூடாது என்ற நல்ல என்னத்தில் (ஆங்கிலப்படங்களுக்கும் அதே நிலை தான் )
 ஒரு மாற்றித்திற்காக ஈரானியப் படங்களை பார்க்கலாம் என முடிவு செய்து முதல்படமாக


"Hayat"

படத்தை இணயத்தில் இருந்து தரவிறக்கம் செய்தேன். மொழி வேறு ,கதைக்களம் வேறு ,கலாச்சாரம் வேறு எப்படி கதை புரியுமோ புரியாதோ என்ற தயக்கத்துடனே படம் பார்க்கத் துவங்கினேன் . படம் ஆரம்பித்த ஒரு சில நிமிடங்களிலேயே எனது தயக்கங்கள் அனைத்தையும் உடைத்தெரிந்துவிட்டார் இயக்குனர். Hayat எனக்களித்த அற்புதமான அனுபவத்தின் காரனமாக தொடர்ந்து இன்னும் நிறைய ஈரானிய திரைப்படங்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் என்னை காய்ச்சல் போல் தொற்றிக்கொன்டது . அதன் விளைவாக அடுத்த நான் தரவிறக்கம் செய்த படங்கள் தான்

The color of paradise


 children of heaven.



இரண்டும் மிக அற்பதமான கலைப்படைப்புகள் .  இனி நான் தமிழ்ப்படங்களை முன்புபோல் ரசித்து பார்ப்பேனா என்பது சந்தேகம் தான்.

Tuesday, 21 February 2012

இடைத்தேர்தல்

இடைதேர்தல் 

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத்த தொடங்கி உள்ளது . ஏறக்குறைய அனைத்து கட்சிகளும் தங்கள் நிலைபாட்டை அறிவித்துவிட்டன .

ஆளும்கட்சியான அதிமுக ,எதிர்கட்சியான தேமுதிக, திமுக,மதிமுக போன்ற கட்சிகள் களத்தில் நிற்கும் முக்கிய கட்சிகள் .

இடைதேர்தல் எனறாலே மக்கள் இப்போதெல்லாம் குஷி ஆகிவிடுகின்றனர் ,ராமதாஸ் சொன்னதுபோல் நம் தொகுதியில் இடைத்தேர்தல் வராத என்று மக்கள் ஏங்கும் அளவிற்கு நிலை மோசம் !

சரி இப்போது கட்சிகளின் நிலையை பார்ப்போம் .


முதலில் அதிமுக :


ஆளும் கட்சி என்பதால் எளிதில் வெற்றி பெற முடியும் என்பதால் தொன்டர்களிடம் உற்சாகம் கரைபுரன்டோடுகிறது.போதாத குறைக்கு அமைச்சர்கள் வேறு முகாமிட்டு"  கவனித்து " வருகிறார்கள்  .


தேமுதிக : தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்றாலும் ஜெ விட்ட சவாலை ஏற்கவேண்டிய கட்டாயத்தில் வேட்பாளரை அறிவித்துள்ளார் விஜயகாந்த் . தனித்துப்போட்டியிடுவதால் இம்முறை மூண்றாவது இடத்திற்கும் ஆபத்து !!


திமுக :

உட்கட்சி சன்டைகளை சமாளிக்கவே திமுக தலைவருக்கு நேரம் பத்தவில்லை  !இந்த நேரத்தில் இடை தேர்தல் வேறு , இடைத்தேர்தலில் வெற்றி என்பது பகல்கனவு என்பதை நன்கு உனர்ந்தவர் கலைஞர்  அவருடைய  இலக்கு என்பது மதிமுக விடம் இரண்டாவது இடத்தை இழந்துவிடக்கூடாது என்பது தான் .


மதிமுக  : முல்லை பெரியார் விசயத்தில் மதிமுக தொடந்து குரல் எழுப்பியதாலும் மக்கள் பிரச்சனைகளை தொடர்ந்து எழுப்புவதாலும் மக்கள் மத்தியில் வைகோவிற்கு நல்ல செல்வாக்கு கிடைத்துள்ளது அதை அறுவடை செய்யும் இடமாக சங்கரன்கோவில் இருக்கும் என மதிமுகவினர் நம்புகிறார்கள் .இரண்டாவது இடத்தை பிடிக்க திமுகவுடன் கடும் போட்டியிடும் என்றே தெரிகிறது .

மொத்ததில் இந்த இடைத்தேர்தல்  சங்கரன் கோவில் மக்களுக்கு கொன்டாட்த்தையும் அரசியல் கட்சிகளுக்கு தின்டாட்டத்தையும்  தரப்போகும் தேர்தலாக அமையும் !்


Published with Blogger-droid v2.0.4

Monday, 20 February 2012

நிலவே வா !!

நிலவே

ஏ நிலவே ……நான் உன்னை காதலிக்கிறேன் !!


எட்டாத தொலைவில் நீ இருந்தாலும் நான் உன்னை காதலிப்பேன் !!


கேட்காத தூரத்தில் நீ இருந்தாலும்

நான் உன்னை காதலிப்பேன் !!


எனக்காக ஒரு போதும் நீ காத்திருப்பதில்லை 

என்பதை தவிர வேறொன்றும் வருத்தமில்லை உன் மீதெனக்கு !!


ஏ நிலவே நீ ஒருநாள் வரவில்லை என்றாலும் …

என் வாழ்க்கை இருன்டு போய் விடுகிறது …இனியொருமுறை அப்படிச் செய்யாதே !!


விடிவதற்குள் ஓடிஒளிந்துகொள்கிறாய்   …நான் பகல்முழுவதம் தேடித் திரிகிறேன் உன்னை !


மாதம் ஒருமுறை மட்டுமே முழுமுகம் காட்டுகிறாய் …சில நாள் தலை மட்டும் ,சிலநாள் கால் மட்டும் ,ஒரு நாள் அதுவுமில்லை !


எது எப்படியோ இன்றாவது என் காதலைச் சொல்லிவிட வேண்டும் என்று காத்திருக்கிறேன் என்வீட்டு மொட்டைமாடியில் உன் வருகைக்காக  !


Published with Blogger-droid v2.0.4

Friday, 21 October 2011

உச்சிதனை முகர்ந்தால்

"உச்சிதனை முகர்ந்தால் " தீபாவளி திருநாள் அன்று திரைக்கு வரும் என்று" தம்பி"களான நாங்களும் ஏனைய ஈழ ஆதரவாளர்களும் எதிர்பார்க்கிறோம் !!    படத்தின் இயக்குனர் :புகழேந்தி தங்கராஜ் ,கதையின் நாயகி புனிதவதியாக :நீ நிகா (நீர்,நிலம் ,காற்று இவற்றின் முதல் எழுத்தே இவருக்கு திரைபெயராக வைத்துள்ளனர்) மற்ற கதாபாத்திரங்களாக அண்ணன் சீமான், நாசர், சத்தியராஜ் ஆகிய முன்னனி நடிகர்கள் நடித்துள்ளனர் .
மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் ஜந்தறிவு ஜீவனான நாய் நடித்துள்ளதாம் !! இத் திரைபடத்தை நார்வே தமிழர்கள் தயாரித்துள்ளனர் !! கதையின் கரு :  சிட்டு குருவியாய் துள்ளித்திரியும் புனிதவதிக்கும் பெண் போரளிகளுக்கும் இடையே உள்ள நட்பு .
தமிழக மக்களுக்கு என் வேண்டுகோள் என்னவென்றால் நல்ல படங்கள் வரும்போது அதை வரவேற்கும் நீங்கள் இந்த படத்தையும் வெற்றி பெறச் செய்வீர்கள் என்று நம்புகிறேன் !!