மளையாலப் திரைப்படங்களை நாம் விரும்ப மிக முக்கிய காரணம் பெரும்பாலும் வில்லன் என்று யாரும் இருக்க மாட்டார்கள்.எதார்த்தம் என்னவோ அதை திரையில் காட்ட முயற்சி பண்ணுவாங்க .
நாம் தினந்தோறும் சந்திக்கும் மனிதர்கள், நாம் கவனிக்க தவறியவர்கள்னு எதார்த்தத்தைக் காட்டுவதால் தான் நாம் திரையில் காணும் கதாபாத்திரங்களோடு நம்மை இணைத்துப்பார்க்கிறோம். சூழ்நிலைகள் தான் வில்லனாக அமையும் அந்த வகையில் இந்தப்படத்திலும் வில்லன்னு யாருமில்லை.
நீங்க கிராமத்தில் கொஞ்ச நாளாவது வாழ்ந்து இருந்திங்கன்னா வாவச்சன் மாதிரி ஆட்களைச் சந்தித்திருக்கலாம்.திடீர்னு காணாம போயிருவாங்க திடீர்னு திரும்பி வருவாங்க ஆனா அவங்க குடும்பத்தில் இருப்பவர்களோ கிராமத்தை சேர்ந்தவர்களோ அவங்களைத் தேட மாட்டாங்க.அந்த மாதிரி ஒரு ஆள் தான் வாவச்சன்
அப்படிதான் அன்றும் தன்னுடைய பயணத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்புகிறார் வாவச்சன்.அவருக்கு தெரியும் இது தான் தன்னுடைய கடைசிப் பயணம் என்று.
பயணங்களையே வாழ்க்கையாய் கொண்டிருந்த ஒரு மனிதன் தன் இறுதிப்யணத்தின் கனவுகளோடு தன் மகனிடம் சில விசயங்களை பகிர்ந்துகொள்கிறார்.
தன் தந்தையின் இறுதி ஊர்வலத்தின் பெருமைகளைச் சொல்லி தனக்கும் அது போன்றதொரு சிறப்பான பயணத்தை ஏற்பாடு பண்ணவேண்டும் என கேட்டுக்கொள்கிறார்.அவர் எதிர்பார்த்தது போலவே அன்று இரவே அவர் இறந்தும் விடுகிறார்.
வாவச்சனின் ஆசைப்படி அவரது இறுதி ஊர்வலம் சிறப்பாக நடந்ததா ?என்னென்ன இடையூறுகளை அவரது மகன் சந்தித்தார் என்பதை மீதிப்படம் சொல்லும்.
நாம் தினந்தோறும் சந்திக்கும் மனிதர்கள், நாம் கவனிக்க தவறியவர்கள்னு எதார்த்தத்தைக் காட்டுவதால் தான் நாம் திரையில் காணும் கதாபாத்திரங்களோடு நம்மை இணைத்துப்பார்க்கிறோம். சூழ்நிலைகள் தான் வில்லனாக அமையும் அந்த வகையில் இந்தப்படத்திலும் வில்லன்னு யாருமில்லை.
நீங்க கிராமத்தில் கொஞ்ச நாளாவது வாழ்ந்து இருந்திங்கன்னா வாவச்சன் மாதிரி ஆட்களைச் சந்தித்திருக்கலாம்.திடீர்னு காணாம போயிருவாங்க திடீர்னு திரும்பி வருவாங்க ஆனா அவங்க குடும்பத்தில் இருப்பவர்களோ கிராமத்தை சேர்ந்தவர்களோ அவங்களைத் தேட மாட்டாங்க.அந்த மாதிரி ஒரு ஆள் தான் வாவச்சன்
அப்படிதான் அன்றும் தன்னுடைய பயணத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்புகிறார் வாவச்சன்.அவருக்கு தெரியும் இது தான் தன்னுடைய கடைசிப் பயணம் என்று.
பயணங்களையே வாழ்க்கையாய் கொண்டிருந்த ஒரு மனிதன் தன் இறுதிப்யணத்தின் கனவுகளோடு தன் மகனிடம் சில விசயங்களை பகிர்ந்துகொள்கிறார்.
தன் தந்தையின் இறுதி ஊர்வலத்தின் பெருமைகளைச் சொல்லி தனக்கும் அது போன்றதொரு சிறப்பான பயணத்தை ஏற்பாடு பண்ணவேண்டும் என கேட்டுக்கொள்கிறார்.அவர் எதிர்பார்த்தது போலவே அன்று இரவே அவர் இறந்தும் விடுகிறார்.

No comments:
Post a Comment